அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ரூ.144.55 கோடி மதிப்பிலான 3 கோப்புகளில் அமைச்சர் வன்னியரசு கையெழுத்து !
தமிழக வெற்றிக் கழக அரசு தனது தோழமைக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்று துறை சார்பான கீழ்க்கண்ட கோப்புகளுக்கு கையொப்பமிட்டார்.
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM ARISE Chief Minister's Adi Dravidar and Tribal Socio Economic Development Scheme)ன் கீழ் 2026-27ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்திற்கு ரூ.75.00 கோடி நிதியும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் 120 கிராம அறிவுசார் மையங்கள் அமைத்திட NABARD RIDF XXX திட்டத்தின் கீழ் ரூ.61.56 கோடி நிதி விடுவிப்பு கோப்பும்,
பிரதான் மந்திரி அனுசுசித் ஜாத்தி அபியுதய திட்டம் (PM-AJAY) என்ற திட்டத்தின் கீழ் 12 மாணவியர் விடுதிகள் கட்டுவதற்காக ரூ.7.99 கோடி நிதியை விடுவிக்க ஒப்புதலிலும் கையெழுத்திட்டுள்ளார். @முதல் நாளிலேயே ரூ.144.55 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த வன்னி அரசு கையொப்பம் இட்டுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.