தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரம் பேரூராட்சி அனைத்து பகுதிகளிலும் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி தாலுகா, மீனாட்சிபுரம் பேரூராட்சி துரைராஜபுரம் பொட்டல் களம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப துவக்கப் பள்ளி மாணவ, மாணவி, பொது மக்களுக்கு பகுதிகளில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக முருகப்பா சூர்யா என்பவர் தலைமையில் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் மீனாட்சிபுரம் துரைராஜபுரம் பொட்டல் களம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் உள்ளிட்ட பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கு விழாவில் தமிழக வெற்றிக்கழக இளைஞர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.