தேனி மாவட்டம் தேனியில் அமைந்துள்ள ஸ்ரீ வரசக்தி விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பிறந்த தின விழா குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டது
தேனி மாவட்டம் தேனி விருதுநகர் நாடார் உறவின்முறை சந்தை பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வரசக்தி விநாயகர் திருக்கோவிலில் 20.06.26 இன்று திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் அவர்களது பிறந்தநாள் விழா குருபூஜை விழாவாக அனுசரிக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக மூலவர்களாக வீற்றிருக்கு அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு தலைமை குருக்கல் சௌமியா நாராயணன் மற்றும் மாரிச்சாமி அவர்களால் சிறப்பு அபிஷேகம்,அழங்காரம், தீபாரதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு பூக்கடை சிவக்குமார் அவர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
மேலும் திருமதி. அருணா அவர்களது குழுவினரால் திருவாசக முற்றுதல் நடைபெற்றது, மேலும் மேலூர் மாயப்பாண்டீஸ்வரர் கைலாய வாத்திய குழுவிரைால் கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது.
விழா ஏற்பட்டினம் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.