மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி அறிவிப்பு

சட்டப் பணிகள் குழுக்களுக்கு சமூகசேவை மனப்பான்மையுடன் பணிபுரிய தேனி மாவட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்

            தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தேனி மாவட்டத்தில் இயங்கும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் போடி ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுக்களுக்கு (Empanelment of Para Legal Volunteer in Police Station for missing Children scheme கீழ் சமூகசேவை மனப்பான்மையுடன் பணிபுரிய தன்னார்வலர்கள் (Para Legal Volunteers) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

              தேனி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் சட்டப்பணிகள் குழுவில் தன்னார்வலர்களாக (PLV) பணியாற்ற குறைந்தபட்ச கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு (+2) ஆகும். வயது வரம்பு 25 முதல் 65 வயது வரை ஆகும். பட்டதாரிகள், சமூகப்பணி, உளவியல் அல்லது அது சார்ந்த பிற துறைகளில் அளிக்கப்படும். தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

 1. சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்கள்

 2. ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட)

 3. அங்கன்வாடி பணியாளர்கள்

 4. உளவியலாளர் (மனோதத்துவ நிபுணர்).

5. MSW பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்

 6. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் (சட்ட மாணவர்கள்)

 7. திருநங்கைகள்

 8. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில பணிபுரிகின்ற தன்னார்வ சட்டப்பணியாளர்கள் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர்.

        மேலும் விபரங்களுக்கு https://theni.dcourts.gov.in/ இணையதள முகவரியில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். சட்டப்பணிகள் குழுவில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்டL இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன்     

             தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தேனி 625 523

 என்ற முகவரிக்கு வருகின்ற 22.06.2026 மாலை 5.30 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்குமாறு முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

செய்தி: ஆசிரிபர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.