மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையரை தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையரை தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

          திண்டுக்கல் மாநகராட்சியில் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் அவர்களை திண்டுக்கல் மாவட்டம் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் அனைவரும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்ததுடன் திண்டுக்கல் நகரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கைமனு வழங்கி நேரடியாக எடுத்துரைத்தனர்.

         மேலும் சில மாற்றங்களை செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். இதில் முக்கியமாக தொழில் உரிமம் ( trading licence ) மற்றும் அனைத்து வரிகளும் அலுவலகத்தில் செலுத்த வழிவகை செய்யும் படி கேட்டுக் கொண்டனர்.

         இதனை தொடர்ந்து ஆணையர் அவர்களும் அதிகாரிகளை உடனே அழைத்து அலுவலகத்திலேயே வரி செலுத்த ஏற்பாடு செய்து கொடுத்தார்.

           ஆணையர் அவர்களுக்கு வர்த்தக சங்கத்தின் சார்பாக நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்தனார்

செய்தி: குருபாண்டியன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.