தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா 12.5.2026 அன்று துவங்கி 19.5.2026 வரை 8 நாட்கள் நடைபெறும்.
இதில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா 15.5.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது
இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட கண்காணிப்பாளர் சினேக பிரியா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் வயல்பட்டி பரமசிவம் செட்டியார், மோப்பஞ் செட்டியார் வகையறாவை சேர்ந்தவர்கள், மாரியம்மன் கோவில்பட்டி கவுண்டர் வகுப்பினர், வயல்பட்டி முத்துச்சாமி செட்டியார் வகையறா, போடி ஜமீன்தார் வடமலை ராஜயபாண்டியன், வீரபாண்டி ரத்தினசபாபதி, மாரியம்மன் கோவில்பட்டி நாகரத்தினம்மாள், பாலார்பட்டி ராசுத்தேவர், ( எஸ்.பி.எஸ்.காலனி ) ஆகியோர் மண்டகப்படி மற்றும் வெள்ளை வீசுதல் ஆகிய முக்கிய ஏற்பாடுகளில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து திருத்தேரினை அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுமக்களுடன் வடம்பிடித்து இழுத்தனர். விழாவின் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஏற்பாடு செய்திருந்தது நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்
செய்தி: பாலகுரு / சாமுவேல்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.