தேனி வைகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தேனி வைகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் செயளாளர் சுரேஷ் பல கோரிக்கைகளை முன்வைத்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
அந்த மனுவில் தேனி மாவட்டத்தில் 24000 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும் இதில் 2023 ஆம் ஆண்டு முதல் பலருக்கு உதவித் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவித்துக் கொடுக்குமாறும்,
தேனி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதனைக்கு செல்லும் போது அங்கு பணி புரியயும் பணியாளர் மாற்றுத்திறனாளிகள் என்று கூட பாராமல் அவர்களிடம் கடுமையாக நடந்து வருவதாக ஏற்கனவே அவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் அழைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும்,
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி இல்லை என்றும், குறிப்பாக சின்னமனூர் நகராட்சியில் கழிவரை பூட்டியுள்ளதாகவும், மேலும் பொது கழிவரைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் என அரசு ஆணை உள்ளதாகவும் இருப்பினும் 10 ரூ கட்டாய வசூல் செய்வதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும்,
தேனி மாவட்டம் முழுவதும் அதிகப்படியான வேகத்தடைகள் ஆபத்தான முறையில் போடப்பட்டுள்ளது இருப்பினும் அதற்குகு அருகில் சுமார் 10 இருக்கும் மேற்பட்ட மஞ்சள் வெள்ளை கோடுகள் போடப்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு முதுகு தண்டுவடம் பாதிப்பு ஏற்படும் விதமாகவும், வாகன பழது ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவே இந்த வேகத்தடை கோடுகளை சற்று குறைந்த எண்ணிக்கையில் மாற்றிக் கொடுக்குமாறும்,
தான் ஒரு தவக்கும் மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் மாற்றத்திறனாளிகளுக்காக மனு கொடுப்பதற்கு தங்களை அணுகும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியக்கூடிய ஊழியர்கள் என்னைப் பற்றி அவதூறாக கம்பம் சட்டமன்ற உறுப்பினரும் தவறான கருத்துக்களை பதிவு செய்து என்னை குற்றவாளியாக காண்பித்து வருகின்றனர்.
என்னை பற்றி அவதூறு பரப்பும் அலுவலர்கள் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களின் பெயர் பட்டியலோடு மனு கொடுத்துள்ளார்.
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.