மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்லில் பிரபல துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

          திண்டுக்கல், பிரபல துணிக்கடையில் வையம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராஜ்குமார்(27) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடையில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

           இதனை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துணிக்கடையின் பின்புறம் R.S.ரோடு பகுதியில் கையில் கஞ்சா வைத்து செல்போனில் அழைத்து விற்பனை செய்து கொண்டிருந்தபோது காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

செய்தி: குருபாண்டியன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.