தேனியில் மணல் கடத்தல், கள்ளச்சந்தை மதுபானம் விற்பது குறித்து புகார் தெரிவிக்க தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் அனுமதியின்றி வண்டல் மண், களிமண், கிராவல் மண் சட்ட விரோதமாக எடுப்பதை தவிர்ப்பதற்ககவும், ரேசன் கடைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் பதுக்குதல் அல்லது கடத்துதல் போன்றவற்றை தடுக்கும் விதமாகவும் இந்த வாட்ஸ்அப் எண் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளைக் காட்டிலும் கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது, அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து வேறு , இடங்களில், கடைகளில் மதுபானங்கள் விற்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூடுதலான நேரங்களில் மதுபானம் விற்பனை செய்வது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது, உரிமம் பெற்று செயல்படும் மதுபானக் கூடங்கள், சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தனியாக புகார் அழிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புகார்களை புகைப்படங்களாகவோ, குறுஞ்செய்திகளாகவோ, வாட்ஸ்ஆப் செய்திகளாகவோ 94877 71077 என்ற எண்ணிற்கு செல்போன் மூலம் தெரிவிக்கலாம். மேலும் இந்த எண்ணில் பிரத்தியோகமாக கைசாலா என்ற செயலியின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. #மேற்படி விவரங்கள் குறித்து கைசாலா என்ற செயலியில் புகைப்படத்துடன் தெரிவிக்கும் போது புகார் தெரிவிக்கும் இடம் சரியான அமைவிடம் குறித்து தெரிந்து கொள்ள இயலும் என்பதால் விரைந்து குற்றச்செயல் நடைபெறும் இடத்தினை சென்றடைய இயலும். இந்த எண்ணில் பெறப்படும் புகார்களை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறை கோட்ட்சியர், வட்டாச்சியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என பலரும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பிரத்யோகமாக இந்த செயலி தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகார் எண் மூலம் தெரிவித்தாலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது ஆனால் தற்போது தற்போதுள்ள மாவட்ட நிர்வாகம் இதை மீண்டும் செயல்படுத்தி உள்ளதா என்று கேட்டால் தெரியவில்லை என அரசு அலுவலர்கள் மத்தியில் தகவல் வெளியாகிறது எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தேனி மாவட்ட நிர்வாகம் இந்த செயலியையும் அலைபேசி எண்ணையும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்தி: பிரதீப்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.