கோவில்

திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் கோயிலில் தங்கம் வெள்ளி மாயம்

பழநி, இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் மாயம் - போலீசார் வழக்குப்பதிவு

        திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டியில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இடும்பன் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

        இக்கோயிலில் சில வாரங்களுக்கு முன்பு கோயில் பதிவேடுகள், சுவாமி நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 17 பவுன் தங்க நகைகள், 52 கிராம் வெள்ளி வேல் ஒன்றும் மாயமானது தெரிய வந்துள்ளது.     

        கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியும், தேடிப் பார்த்தும் நகைகள் கிடைக்காததால் அறநிலையத்துறை அதிகாரிகள் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

          இதுகுறித்து பழநி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.