மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் த. வெ. க வில் இணைந்த மாற்று கட்சியினர்

ஆத்தூரில் தவெக-வில் இணைந்த மாற்று கட்சியினர்

        தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக, திமுக, மற்றும் தேமுதிகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய் முன்னிலையிலும், பிற மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையிலும் கட்சியில் சேர்ந்துள்ளனர்

        இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சி சேர்ந்த பெண்கள் தவெக ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கலைச்செல்வி முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்

        இந்த நிகழ்வின் போது திண்டுக்கல் மத்திய மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.