வத்தலகுண்டு அருகே கோவில் திருவிழாவில் அரசு ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி 3 குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம்.
வத்தலகுண்டு அருகே கோவில் திருவிழாவில் அரசு ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி 3 குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம். போக்குவரத்து பாதிப்பு.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள புதுப்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி வண்டி வேஷம் நிகழ்ச்சி ஊர்வலம் நடந்துள்ளது @இந்த ஊர்வலத்தில் கஞ்சா மற்றும் மது போதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்களை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்ற அரசு ஊழியர் கண்டித்துள்ளார்
இதனால் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் போதையில் இருந்த இளைஞர்கள் கருப்பையாவை சரிமரியாக தாக்கினர் இதில் தலையில் படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கருப்பையாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படாததால், அவரது மனைவி இன்று மூன்று குழந்தைகளுடன் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு சென்று, தனது கணவரை கஞ்சா மற்றும் மது போதையில் கத்தியால் தலையில் வெட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
மேலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்யப்படாதே கண்டித்து, பாதிக்கப்பட்டவரின் மனைவி பூமாதேவி வத்தலகுண்டு காவல் நிலையம் முன்பு, பெரியகுளம் சாலையில் தனது மூன்று குழந்தைகளுடன் சாலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது,வத்தலகுண்டு காவல்துறையினர், பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தனது கணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவில்லை என ஆவேசமாக பேசினார். பின்னர், பெண் காவலர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.