மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் - டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக கோரிக்கை மனு

தேனியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக கோரிக்கை மனு

         தேனி மாவட்டம் டாஸ்மாக் தொழிற்சங்கங்களில் கூட்டுக் குழுவின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது. @அந்த மனுவில் தமிழகத்தில் புதியதாக பதவி ஏற்றிருக்கும் தமிழக அரசை கூட்டுக்குழு சார்பாக வரவேற்கிறோம். டாஸ்மாக்கில் கடந்த 23 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் இந்த சமூகத்தில் மரியாதை இழந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கி இந்த சமூகத்தில் மரியாதையுடன் டாஸ்மாக் ஊழியர்கள் வாழ்வதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

             சில இடங்களில் பார் ஏலம் எடுத்து நடத்துபவர்கள் ஊழியர்களை குண்டர்கள் வைத்து மிரட்டுகின்றனர்.அவ்வாரு மிரட்டுவதால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட பார் உரிமையாளர்களின் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும்.

             மேலும் ஊழியர்கள் சமூக விரோதிகள் போலி பத்திரிக்கை நிருபர்கள் ஊழியர்களை தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டி வருகிறார்கள்

            இரவு 10 மணிக்கு கடையை மூடிய பின்பு கணக்கு பார்ப்பதற்கு விற்பனை தொகையை சரிபார்ப்பதற்கும் 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அந்த நேரங்களில் காவலர்கள் எங்களை கடையை மூடிய பின்பு வெளியேறுங்கள் என்று நிர்பந்தம் செய்கிறார்கள். மேலும் டாஸ்மாக் விதிமீறல்களில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

              மின்கட்டணம், அட்டைபெட்டி சேதாரம், உடைந்த பாட்டில் மற்றும் கடை வாடகை கடை முன்தொகை போன்ற செலவினங்களை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

               மேலும் காலி பாட்டில் திரும்ப வாங்கும் திட்டத்தினால் டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அதற்கு மாற்று முகமை மூலம் விரைவாக சரிசெய்ய வேண்டுகிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என கோரிக்கை மனு மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.