புகார் செய்திகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் எரிக்கப்படும் குப்பைகளால் புகை அதிபாதிப்பு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எரிக்கப்படும் குப்பைகளால் ஏற்படும் புகை மூட்டத்தால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

        ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எரிக்கப்படும் குப்பைகள் 5வது வார்டு பகுதிக்குரிய கிடங்குகளில் சேமிக்கப்படுவதால் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் கரும்புகை அருகில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கும் பரவுவதால் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

            இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் குடியிருப்பு வாசிகள் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி வேறு பகுதிகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அண்ணாமலை அன்பு கூட்டம் தேனி மாவட்ட தலைவர் நரி நாகேந்திரன், ஹரிஹரன் ஆறுமுகம் பிரேம் நசீர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் .

 செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.