மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் த.வெ.க நிர்வாகி மகன் தாக்கியதாக செல்வி என்பவர் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் த.வெ.க நிர்வாகி மகன் தாக்கியதாக செல்வி என்பவர் புகார்

         திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கே எஸ் கோவிந்தராஜிற்கு சொந்தமான உணவகத்தில் வேலை செய்து வரும் பட்டியல் இனப்பெண்ணான செல்வி என்பவரை கோவிந்தராஜனின் மகன் ஹரி என்பவர் வன்கொடுமை தாக்குதல் செய்ததோடு உன்னை கொலை செய்தால் கூட என்னை யாரும் கேட்க முடியாது என மிரட்டல் விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

        மேலும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கே எஸ் கோவிந்தராஜ் பணப்பலம் மிக்கவர் என்பதாலும் பல அடியாட்களை வைத்துள்ளதாலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார் இதனால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.