அவல நிலையில் தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில்
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஶ்ரீ கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வெள்ளி செவ்வாய்க்கிழமை மற்றும் முக்கியமான நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்வது குறிப்பிடப்பட்டது. இப்படி பிரசக்தி பெற்ற இந்த திருக்கோயில் வளாகம் பல நாட்களாக குப்பை மேடுகளாக காணப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழக அரசு வழங்கக்கூடிய அன்னதான நடைபெறும் இடத்தில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலையில் நிரம்பி வழிந்தது ஓடும் காட்சி அன்னதானத்திற்கு செல்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது மேலும் எந்தப் புறம் திரும்பி பார்த்தாலும் கழிவு நீரின் துர்நாற்றமும் குப்பைகளின் துர்நாற்றமும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.துர்நாற்றத்தில் பக்தர்கள் மட்டும் மூக்கை மூடிக் கொண்டு போகவில்லை கெளமாரியம்மனே மூக்கை மூடிக்கொண்டு திருக்கோவில் விட்டு வெளியேறி விடுவாரோ என்ற பேச்சும் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் முனுமுனுத்து வருகின்றனர்
இது சம்பந்தமாக பலமுறை பேரூராட்சி அலுவலகத்திலும் திருக்கோவில் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை என பக்தர்கள் கூறுகின்றனர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்க்கு வரக்கூடிய பக்தர்களின் குறை தீருகிறதோ இல்லையோ நோயைக் பெற்றுச் செல்லும் அவல நிலையில் திருக்கோவில் வளாகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.