மாவட்ட செய்திகள்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்

         தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம். ஆட்குறைப்பு அரசாணைஎண் 204 ஐ ரத்து செய்யவேண்டும், தொகுப்பூதிய முறையை ரத்துசெய்து தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி - தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவதுநாளாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடுஅரசு செவிலியர் சங்கத்தினர்

          தமிழகம் முழுவதும் பணிபுரியும் தமிழ்நாடுஅரசு செவிலியர் சங்கத்தினர் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்வது காலையில் 1மணி நேரம் பணியை புறக்கணித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்திவரும் நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆட்குறைப்பு அரசாணை எண் 204 ஐ ரத்து செய்யவேண்டும் தொகுப்பூதிய முறையை ரத்துசெய்து தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் செவிலியர் அலுவலரை நர்சிங் ஆபீஸர் என பெயர் மாற்றம் செய்து வறன்முறை அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

          ஆர்ப்பாட்டத்தில் தமிழகஅரசுக்கு இந்த மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்தும், இதனை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.