தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சியில் பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை காரணமாக திடீர் சாலை மறியல்
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் வினியோகம் வழங்கப்படாததால் பூதிப்புரம் பேரூராட்சி உட்பட்ட வாழையாத்துப்பட்டி பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கண்டு கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.