உள்ளூர் செய்திகள்

தலைவர் வரதராஜன் பிறந்தநாளை ஒட்டி ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தொழிற்பயிற்சி மையம் திறப்பு:

தலைவர் வரதராஜன் பிறந்தநாளை ஒட்டி ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தொழிற்பயிற்சி மையம் திறப்பு:

     ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இலவச டெய்லரிங் மற்றும் கணினி பயிற்சி மையம் தொடக்க விழா ரோட்டரி மாவட்ட கவர்னர் ரவிக்குமார் தலைமையில் கஜேந்திரன் மற்றும் தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் தலைவர் வரதராஜன் பிறந்த நாளை முன்னிட்டு தையல் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி திறப்பு விழா நடைபெற்றது

       இதில் ஒருங்கிணைப்பாளர் திராவிடச்செல்வன். விழாவினைச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். வழக்கறிஞர் ராஜேந்திரபிரசாத். மற்றும் பொருளாளர் குணாளன். ஆகியோர் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.

   ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கத் தலைவர் வரதராஜனின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்தநாள் பரிசாகவும் சேவையாகவும் இந்த இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

      விழாவில் சபீர் அகமத், கிளப் ஓவர்சீஸ் சர்வீஸ் ரவி மற்றும் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ##பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறும் என இந்த பயிற்சியில் ஏழை மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயன்பெறும் வேண்டுமென கேட்டுக் கொண்டனர்

செய்தி: மணிகண்டன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.