கொடைக்கானல் மலைப்பகுதியில் டி கே டி பட்டா நிலங்களில் கட்டப்பட்டும் கமர்சியல் கட்டிடங்கள் கைகொடுக்கும் மாவட்ட நிர்வாகம்
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 15 வருவாய் கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் பின்தங்கிய நிலமற்ற ஏழை மற்றும் பொருளாதாரரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்காகவும், விவசாயத்திற்காகவும் மேலும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அரசு வழங்கும் ஒரு வகை ஒப்படைப்பு நிலமானது டி கே டி பட்டா நிலம் (தாரகஸ்து) இந்த பட்டா நிலங்கள் , ஏழை மற்றும் பின்தங்கிய விவசாயிகளுக்கு தமிழக அரசு அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை அரசு வழங்கிய பட்டா உரிமை என்றாலும், முறையாகப் பட்டா மாற்றம் மற்றும் வரன்முறை செய்யும் சட்ட விதிகள் நிலத்திற்கு நிலம் மாறுபடும். கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 4500 க்கும் மேல் டி கே டி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுவாக இந்த நிலங்களை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் என்று தமிழக அரசின் ஆணை இருக்க ஒரு சில கட்டுப்பாடுகளின் கீழ் கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று ஏராளமான டி கே டி நிலங்கள் பத்திர பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
டி கே டி பட்டா நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் மேலும் வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற அரசின் சட்டம் இருக்க கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஏராளமான டி கே டி நிலங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி காட்டேஜ் போன்ற 2000 க்கும் அதிகமான வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் டி கே டி விளைநிலங்களில் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் மறைமுக ஆதரவோடு சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல் ஊராட்சி வில்பட்டி ஊராட்சி உட்பட்ட சுமார் 26 மலை கிராமங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் டி கே டி பட்டா விளை நிலங்களை விலைக்கு வாங்கி தங்களது அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் செல்வாக்கை பயன்படுத்தி பத்திர பதிவு செய்து காட்டேஜ் போன்ற ஏராளமான சட்டவிரோதமாக வணிக கட்டிடங்கள் கட்டி அதனை வைத்து பணம் சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வனவிலங்கு சரணாலயம் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் டி கே டி பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக காட்டேஜ் போன்ற கட்டிடங்கள் கட்டி அருகில் உள்ள நீரோடைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாடும் பாதைகளை மறைத்து வனவிலங்குகள் செல்ல வழியில்லாமல் வேலி அமைத்து வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதால் வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர்கதையாகி வருகிறது .
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் மலைப் பகுதியை ஆய்வு செய்து டி கே டி பட்டா நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது .
செய்தி: கோடை ரஜினி
கருத்துகள் (0)
Be the first to comment on this article.