அழியும் நிலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி !!!!
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் அழைக்கப்படும் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலாத்தலமாகும் இங்கு பல நாடுகள் மற்றும் மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் சீர்தோச நிலையை அனுபவிப்பதற்காக வந்து செல்கின்றனர்.
மேலும் சுற்றுலா தளத்தில் முக்கியமான ஒன்று இயற்கை தந்த நட்சத்திர வடிவிலான இந்த ஏரி ஆகும் இந்த ஏரி தற்போது பல இடங்களில் வறண்டு காணப்படுகிறது மேலும் இந்த ஏரி பழனிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது மழை இல்லாத காரணத்தினால் பழனியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி முற்றிலும் அழிந்து வருகிறது இந்த ஏரியை சுற்றி ஐந்து மீட்டர் பரப்பளவில் உள்ள உள்ள இடங்களில் கண் துடைப்பாக நகராட்சி மூலம் பல கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது ஆனால் பல கேமராக்கள் இதில் இயங்கவில்லை காட்சி பொருளாக மட்டுமே உள்ளது என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த கேமராக்கள் இயங்காததால் பல குற்ற செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் ஏரிக்குள் மது அருந்திவிட்டு பாட்டிலை ஏரிக்குள் வீசுவதாகவும் அவை ஏரியில் மிதப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தடுப்பதற்கு நகராட்சி முன் வரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள இந்த நட்சத்திர ஏரி வறண்டு வரக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் மாவட்ட நிர்வாகம் ஏரியை காப்பாற்ற முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி: கோடை ரஜினி
கருத்துகள் (0)
Be the first to comment on this article.