மாவட்ட செய்திகள்

தமிழக இந்து மகாசபா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு !!

தமிழக இந்து மகாசபா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு !!

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கீழவடகரை வைத்திய நாத புரத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகளுக்கும் முன் தோன்றிய பிரசித்து பெற்ற ஸ்ரீவைத்தியநாதசுவாமி கோவில் பல ஆண்டுகாலமாக பராமரிப்பில் இல்லாத நிலையில் மிகவும் சேதமடைந்தும் மாசடைந்து கிடக்கும் நிலையில் மீட்டு எடுத்து பராமரிப்பு பணிகளை தொடங்கி விரைவில் முடித்து பிரசித்திபெற்ற ஸ்ரீவைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்திட தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த மனுவில் குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் சென்று கலந்தாய்வு செய்து கும்பாபிஷேகம் நடத்திட வழிவகுக்க வேண்டும் என பெரியகுளம் தமிழக இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

        இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்துமகாசபா மாநிலத் தலைவர் ராஜா, மாநில ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர், தமிழக இந்துமகாசபா மதுரை மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், தேனி மாவட்ட ஆலய பாதுகாப்பு தலைவர் மூர்த்தி, ஆலய பாதுகாப்பு துணைத்தலைவர் சின்ன கருப்பு, செயலாளர் சரவணன், துணைசெயலாளர் உயகுமார், பாதுகாப்பு அமைப்பாளர் ஜெயகுமார், ஒருங்கிணைப்பாளர் வீரக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் வீராச்சாமி, ஊஞ்சாம்பட்டி ஆலய பாதுகாப்பு தலைவர் அய்யப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்,

செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.