புகார் செய்திகள்

திண்டுக்கல் சுய உதவிக் குழு பெண்களிடம் ஏமாற்றிய தொண்டு நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை பெற்றுத் தர வேண்டும் என பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திண்டுக்கல் சுய உதவிக் குழு பெண்களிடம் ஏமாற்றிய தொண்டு நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை பெற்றுத் தர வேண்டும் நிறுவனர் ஜேசுதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

      திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டம் சமயநல்லூர் வாடிப்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு உடன் வந்திருந்தனர்

        புகார் மனுவில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆப்ரோ தொண்டு நிறுவனத்தின் திண்டுக்கலை சேர்ந்த ஆனந்தி மூலம் கடன் வாங்குவதற்காக முன் பணம் கட்டினோம் எங்களைப் போல் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை திருச்சி பகுதிகளைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடன் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் பணங்கள் கட்டி ஏமாந்து விட்டோம் நாங்கள் கேட்கும் பொழுது ஆனந்தி பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் வாங்கித் தருவதாக கூறியுள்ளார் 

        இந்நிலையில் ஒரு சில உறுப்பினர்கள் ஆனந்த இடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை பணி செய்யவிடாமல் சோபியா கிளாடினெஸ் லீலாவதி கனகவல்லி மற்றும் பிரேம் ஆகியோர் தடுத்து வருகிறார்கள்

         ஆனந்தி ஒரு மாதத்தில் பணம் தருவதாக கூறிய நிலையில் தொடர்ந்து 5 பேரும் சேர்ந்து பிரச்சனை செய்து வருவதால் எங்களுக்கு பணம் கிடைக்குமா? கிடைக்காதா என்ற மன உளைச்சலில் உள்ளோம்

        மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு வழங்கியுள்ளோம் என்று கூறினார்

செய்தி: குருபாண்டியன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.