அரசியல்

திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிகண்டன் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு

திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கட்சி தாவியதால் பரபரப்பு

திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் என்பவர் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

       இதனை தொடர்ந்து கட்சித்தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாற்று கட்சிக்கு சென்றுள்ள கார்த்திக் மாமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல தலைவர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிகண்டன் மாநகராட்சி ஆணையரிடம் புகார்மனு அளித்துள்ளார்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.