திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற் பயிற்சி மையத்தில் சூரிய ஆற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற் பயிற்சி மையத்தில் மேற்கூரை சூரிய மின் சக்தி தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் ஸ்டெல்லாமேரி வரவேற்று பேசினார். திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன் தலைவர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
இதில் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் மூத்த ஆராய்ச்சியாளர் பரத்ராம் கலந்துகொண்டு பயிற்சியால் மாணவர்களுக்கு பயன்படும் விதம் பற்றியும் இதனால் மாணவர்களுக்கு எவ்வாறு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்பது பற்றியும் தெளிவாக விளக்கி கூறினார். செல்கோ சோலார் லைட் பிரைவேட் லிமிடெட் முதன்மை மேலாளர் சங்கர் மற்றும் சதீஷ் ஆகியோர் சோலார் பேனல் இன்வெர்ட்டர் ஒயர் போன்றவைகள் எவ்வாறு இணைந்து சூரிய மின்சக்தியின் மூலம் மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி செய்முறை விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் ஆராய்ச்சியாளர் கிருபாகரன் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அதில் சிறப்பாக பதில் அளித்த மாணவர்களை தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறினார்.
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன் செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். இதில் 40 மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்
செய்தி: வேலுச்சாமி
கருத்துகள் (0)
Be the first to comment on this article.