கோவில்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பசுவந்தனை அருள்மிகு ஸ்ரீ கன்னி விநாயகர் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவில் ஆனி மாத கொடை விழா

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பசுவந்தனை அருள்மிகு ஸ்ரீ கன்னி விநாயகர் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவில் ஆனி மாத கொடை விழா நடைபெற்றது

           தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் பசுவந்தனை கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கன்னி விநாயகர் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலின் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் அதனைத் தொடர்ந்து மாலை தீர்த்த குடம் எடுத்தாலும், இரவு முளைப்பாரி அக்னிசட்டி ஊர்வலம், இரவு 12.00 மணிக்கு சாமக்கொடை பூஜை சிறப்பாக நடைபெற்றது

           இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு கன்னி விநாயகர் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் அருள் பெற்றனர்.

         கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ கன்னி விநாயகர் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

செய்தி: சக்திவேல் முருகன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.