உள்ளூர் செய்திகள்

Theni district - Collector inspect all school bus's

தேனி மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

       தேனி மாவட்டம், தேனி ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா முன்னிலையில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

      இந்த ஆய்வில் தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 47 பள்ளிகளில் (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகா) உள்ள 380 வாகனங்களில் 297 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.

        ஆய்வு செய்யப்பட்ட 297 வாகனங்களில் சிறு சிறு குறைபாடுகள் கொண்ட 18 வாகனங்கள் கண்டறியப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 279 வாகனங்கள் தகுதியானவையாக கருதப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ள வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பள்ளி குழந்தைகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும்.

         இதேபோன்று உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட (உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டம்) 287 பள்ளி வாகனங்கள் வருகின்ற 14.5.2026 அன்று கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

         இந்த ஆய்வில், பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன், வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.