ஆளுங்கட்சி MLA க்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் அதை பார்த்து கையை பினைந்த காவல் துறையினர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் பகுதியில் விவசாய பயன்பாட்டிற்க்கு கண்மாயில் வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்ததை தனிநபர்கள் அரசு அதிகாரிகளின் துணையுடன் விற்பனை என்பதை விருதுநகர் மாவட்டம்: மம்சாபுரம் பகுதியில் தொடரும் கனிம வளக் கொள்ளை !!!! என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தோம் நமது செய்தியின் எதிரொலியாக !!!!!
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருகார்த்திக் எம்எல்ஏ அவர்கள் மம்சாபுரம் வாழைகுளம் கம்மாயில் மணல் கொள்ளையை நேரில் ஆய்வு செய்ய சென்றபோது ராஜேந்திரன் (எ) குட்டியும் மம்சாபுரம் பேரூராட்சியின் சேர்மன் சுஜிதா மேரி என்பவரின் கணவர் ஒன்பதாவது வார்டு திமுக கவுன்சிலர் தங்கமாங்கணி வாழைகுளம் கம்மாயில் மணல் அள்ளிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதை தடுத்து நிறுத்திய சட்டமன்ற உறுப்பினரை பார்த்து நீ யாருடா மணல் அள்ளுவதை தடுப்பதற்க்கு நான் இந்த ஏரியா சேர்மன் மைன்ஸ் AD PWD AI மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி தான் மணல் அள்ளப்படுகிறது என்று மிரட்டியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பரப்பட்டு வருகிறது
தங்க மாங்கனியும், குட்டியும் சேர்ந்து ஒரு நடைடிராக்ட்டருக்கு ௹ 3000 வீதம் ஜெயராஜ் என்பவரின் ஆலக்கொட்டையில் 10 லோடு மண் தட்டியுள்ளதாக கூறப்படுகிறது. வாழைக்கும் பண்ணையில் மட்டும் சுமார் 30 லோடு மண் தட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அது போக சந்திரன் என்பவரின் காட்டிற்க்கு சுமார் 300 நடைமண் தட்டப்படுள்ளதாகவும், கண்மாயில் மண் அள்ளுவதற்க்கு இடையூறாக இருந்த ஒரு பனைமரம் முழுவதுமாக JCB மூலம் தோண்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், மணல் கொள்ளையால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ள தாரவும் கூறப்படுகிறது.
இந்த திமுக கவுன்சிலர் தங்கமாஙகனி ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர் என அரசியல் வட்டாரம் கூறுகிறது, மேலும் தற்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பார்த்து மரியாதை இல்லாமல் நீ யாருடா பெரிய கொம்பனா என்னை கேட்பதற்க்கு உன் கட்சி ஆட்டம் எல்லாம் ஆறு மாசம் தான் எல்லாம் முடிந்து விடும் என்று மம்சாபுரம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் பகிரங்கமாக M.L.A வை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை கண்டும் காணாமல் சிரித்துக்கொண்டே மம்சாபுரம் காவல் ஆய்வாளர் சக காவலர்களுடன் கண்டும் காணாமல் சிரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மம்சாபுரம் பேரூராட்சியின் சேர்மனாக பணியாற்றி வரும் சுஜிதா மேரி பெயரை பயன்படுத்தி நான்தான் இங்கு சேர்மன் என்று தங்கம் மாங்கனி கூறியது அதிகார துஷ்பிரயோகம் ஆகும் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மது போதையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை மரியாதையில்லாமல் பேசி மிரட்டியது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தொடர்ந்து கனிமவள கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மம்சாபுரம் காவல் ஆய்வாளர் லஞ்சமாக பெறுவதாகவும் கூறப்படுகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் மைன்ஸ் அதிகாரிகள் மணல் கொள்ளையர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு வருவதால் கனிமவளக் கொள்ளையை தடுப்பதில்லையென அந்தப் பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
நமது செய்தி தலத்தில் வெளியிட்டபின்பு வழக்கு எண் 135/2026,136/2026 வழக்கு பதிவு செய்யப்பட்டு மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . ஆட்சிகள் மாறினாலும் காட்சி மாறவில்லை என்று அந்தப் பகுதி விவசாய பெருங்குடி மக்கள் புலம்புகின்றனர், ஆட்சிமாற்றம் ஏர்ப்பட்ட பின்பும் அதிகாரிகள் மாறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது இந்த செயல்
செய்தி: விமல்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.