மாநில செய்திகள்

தமிழ் நாடு முழுவதும் 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல் !!!!

அமைச்சர் பிரபு அதிரடி 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்

         தமிழ்நாடு முழுவதும் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் இயற்கை வளங்கள் துறையின் அமைச்சர் டிகே பிரபு போட்ட உத்தரவின் பெயரில் தற்காலிகமாக மூடயுள்ளது. மேலும் உரிய அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 469 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை தமிழக கனிமவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

       தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் சுமார் 300க்கும் மேல் லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

        இதனை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் இயற்கை வளங்கள் துறையின் அமைச்சர் டிகே பிரபு தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு தென்காசி - கேரளா எல்லையில் சோதனை சாவடியில் ஆய்வு செய்தார்.

                கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும். கல்குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமவளங்களை வெட்டி எடுப்பதை தடுக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: @தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து கல்குவாரிகளின் அந்தந்த மாவட்ட கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட அனுமதி ஆணைப்படி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெட்டியெடுக்கப்பட்டுள்ளதா என்றும் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுகின்றனவா. உரிய அனுமதியோடு கனிமங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றனதா என்று என உள்ளிட்ட அனைத்து இனங்களையும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் டிகே பிரபு வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்

       இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டிகே பிரபு கடந்த வாரத்தில் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

        தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த 1 வாரமாக தீவிர சோதனை நடத்தியதில் 431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டு, 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 67 குவாரிகளின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 88 குவாரிகளின் குவாரி பணியினை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. @கனிமங்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனங்களை சோதனை செய்ததில், சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துசென்ற 469 வாகனங்கள் மீது அபராதம் மற்றும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. @மேலும், சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்டதம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி குவார்ட்ஸ் கனிமம் வெட்டி எடுக்கப்பட்டது கனிமவளத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

        மேலும், குத்தகைகாலம் முடிவுற்று காலாவதியான குவாரிகள் மற்றும் தற்போது இயக்கத்தில் இல்லாத குவாரிகள் அல்லது அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுத்துச்செல்வது கண்டறியும்பட்சத்தில் சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.