தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது தொடர்பாக எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்
தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தில் உதயநிதி ஸ்டாலின் மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பாஜகவினர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமிதா சச்தேவா தாக்கல் செய்துள்ளார்.
மேலும் 2023 செப்டம்பர் மாதம் சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டும், சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும் என்று பேசியதால் பல புகார்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எஃப்ஐஆர் பதிய செய்ய உத்தரவிட்டாலும் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய அவரது பேச்சையும் அவருக்கு எதிரான ஆவணமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு மே 19ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.