புகார் செய்திகள்

தேனி - வீரபாண்டி திருவிழாவிற்க்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தை வழிமறித்து தங்க தாலி பறிக்க முயற்சி - இந்து எழுச்சி முன்னணி பி.சி.பட்டி காவல் துறையினரிடம் புகார்

நேற்று 14.05.2026 அன்று வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு பெரியகுளம் செல்லும் புதிய பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பிய இந்து எழுச்சி முன்னணி தேனி நகர துணை செயலாளர் ரெங்கராஜ் ஜீ அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் ஆதிபட்டி பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்து திடீரென அவர்கர் வாகனத்தை வழிமறித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

      மேலும் திருடர்கள் கையில் வைத்திருந்த கட்டிங்பிளேடாள் ரெங்கராஜ் அவரது மனைவி நாகராணி கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் மதிக்கத்தக்க தங்க தாலிக்கொடியை அறுக்க முயன்ற போது கட்டிங்பிளேடு கழுத்தில் பட்டதில் சத்தமிட்டுள்ளார். அச்சமடைந்த மூன்று மர்ம நபர்களும் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் செல்லும் பாதை வழியாக தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

        இதையடுத்து போடி விலக்கு ரவுண்டானாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் நடந்த விபரங்களை தெரிவித்துவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 

        இந்து எழுச்சி முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், தேனி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணை தலைவர் சிவா ஜீ, நகர செயலாளர் அழகு பாண்டி ஆகியோர் இணைந்து பி.சி பட்டிகாவல் ஆய்வாளர் மகேஷ் அவர்களிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். காவல் ஆய்வாளர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

        மேலும் வீரபாண்டி திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு நேரங்களில் குடும்பத்துடன் பயணம் செய்கிற சூழ்நிலையில், பைபாஸ் சாலையில் உள்ள பாலம் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இரவு நேரங்களில் போதுமான மின் விளக்கு வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.