அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூ ஊதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி 1ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள். இதனை தொர்ந்து கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தி 58% ஆக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதன் மூலமாக 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். செய்தி: ஆசிரியர்
உள்ளூர் செய்திகள்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.