புகார் செய்திகள்

தேனி : பெரியகுளம் செவன்த் டே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

பெரியகுளம் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை வேண்டி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பள்ளி முதல்வர் புகார்

        தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தெ.கள்ளிப்பட்டியில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது .இப்பள்ளியின் முதல்வர் மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர், திண்டுக்கல் காவல்துறை தலைவர் , தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அவர் பணி புரியும் பள்ளியில் ஏற்படும் பிரச்சனை குறித்து உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து தரக் கூறி புகார் மனு அனுப்பி உள்ளார் அந்த மனுவில் தங்களது திருச்சபை மற்றும் பள்ளி கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முழுவதும் நிர்வாக நடைமுறையின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை சுமார் 60 நபர்களை பணியிட மாற்றம் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

       இந்நிலையில் எங்களது கல்வி நிறுவனத்தில் இயற்பியல் ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். எனவே கல்வி நிறுவனத்தின் நிர்வாக நடைமுறையின்படி அவர் வேலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் .

       இந்நிலையில் பணியிட மாற்றத்தை அறிந்த அவரும் அவரது கணவரும் கல்வி நிறுவனத்தின் மீது கோபம் கொண்டு கடந்த   25. 5. 2026 அன்று காலை சுமார் 11.30 மணி அளவில் எங்களது கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்படி கணவன் மனைவி இருவரும் அரசியள் பிரமுகர்கள் என்ற பெயரில் 20 முதல் 25 அடியாட்களுடன் கல்வி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்தும், முற்றுகையிட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்று பள்ளியின் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை கூறி கோஷமிட்டும் அடியாட்களுடன் வந்து தொடர்ந்து வன்முறை குற்றச் செயலில் ஈடுபட்டு கல்வி நிறுவனத்தை சேதப்படுத்துகின்றனர் என்றும் எங்கள் மீதுமேலும் பிசிஆர் வழக்கு பதிவு செய்து யாரையும் சும்மா விடமாட்டோம் என்று மிரட்டுகின்றனர் .

        இது சம்பந்தமாக அன்றைய தினம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கபட்டாகவும், ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தொடர்ந்து வன்முறைச் செயலில் ஈடுபட்டு கல்வி நிறுவனத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்றும் ஆபாச வார்த்தைகளை கூறி கொலை மிரட்டல் விடுக்கும் மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனறும் புகார் அளித்துள்ளார் .

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.