புகார் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவரின் தலையில் தலை முடியை முற்றிலும் சுத்தம் செய்யாமல் தலை முடியை வைத்து தையல் போட்டதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் அருகே குடும்பத்தகராறில் மண்டை உடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவரின் தலையில் தலை முடியை சரியாக சுத்தம் செய்யாமல் தலை முடியை வைத்து தையல் போட்டதாகவும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு

          திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள குயவன் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் இவரது மனைவி கவிதா இவர்களது 2 குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் முன்விரதம் காரணமாக இவரது உறவினர் பிரவீன் என்பவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கதிரேசனின் மண்டை உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மண்டை உடைந்த குமரேசன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு 9 மணி அளவில் வருகை தந்து சிகிச்சை பெற்றுள்ளனர். அப்பொழுது மண்டையில் உள்ள தலைமுடியை முற்றிலும் சுத்தம் செய்யாமல் தலை முடியை அப்படியே வைத்து தையல் போட்டதாகவும் இதைப்பற்றி பணியில் இருந்த மருத்துவரிடம் கூறுகையில் அவர் உதர்சீனப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

         திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளிடம் மருத்துவர்கள், பணி செய்யக்கூடிய பணியாளர்கள் முறையான சிகிச்சை அளிப்பதில்லை இதனால் இங்கு சிகிச்சை பெறக்கூடிய அடித்தட்டு நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது .

         இதனால் கிராமப்புறங்களில் இருந்து சிகிச்சை வரக்கூடிய நோயாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிரினை காத்திட வேண்டும் என்றும் பணியை சரிவர செய்யாத மருத்துவர் மற்றும் பணியாட்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.