உள்ளூர் செய்திகள்

தேனி - ஆண்டிபட்டி தாலுகா பாலூத்து கிராம மயானத்தில் காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பாலூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட மயானத்தில் மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் எலும்புக்கூடாய் காட்சியளிப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளதாகவும் மூவேந்தர் முன்னேற்ற கழக தேனி மாவட்ட துணை தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.

         இதுகுறித்து அவர் கூறுவதாவது இறுதி சடங்கிற்காக மயானத்திற்கு செல்லும் பொதுமக்கள் மின்கம்பத்திற்கு பயந்து மயானத்துக்கு வெளியிலே நின்று இறுதிச் சடங்கை முடித்துவிட்டு செல்வதாகவும், எலும்புக்கூடாய் காட்சி அளிக்கும் இந்த மின்கம்பம் யாரெல்லாம் காவு வாங்க காத்திருக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

        மேலும் மின்சார வாரிய அலுவலகம் 500 மீட்டர் தொலைவிலே இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இதை கண்காணிக்க யாருமில்லாமல் இருப்பது வேடிக்கையாக இருப்பதாக பாலூத்து கிராம மக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து மின்சார வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது மயானத்தில் இருக்கக்கூடியது கம்பத்தை பெருசா நாங்க பாக்க மாட்டோம் அப்படி எதுனா ஆபீஸ்ல போய் கேளுங்க என்று அவர்கள் தரப்பிலிருந்து பதில் கூறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

           இதனை சரி செய்ய வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்ற கழகம் தேனி மாவட்ட துணை தலைவர் பாண்டீஸ்வரன் மற்றும் அப்பகுதி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.