புகார் செய்திகள்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் மீது இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் புகார்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் மீது இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் புகார்

             தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒன்பதாவது வார்டு சந்தை தெருவில் அமைந்துள்ள சிவகாமி மீட்டிங் கால் அருகில் பெரிய சாக்கடையில் மருத்துவக் கழிவுகள் மனித கழிவுகள் நிறைந்து ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்ய துப்புரவு பணியாளர்கள் இருவரையும் ஆணையாளர் கோபிநாத் துப்புரவு ஆய்வாளர் வேல்முருகன் முன்களப்பணியாளர் தவசிமுத்து ராஜா ஆகியோர்கள் அபாயகரமான நோய் தொற்று ஏற்படும் வகையில் உள்ள இந்தப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்ற தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது இந்த பணியில் ஈடுபடுத்தி அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்கள் இதை இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.