விருதுநகர் மாவட்டம்: மம்சாபுரம் பகுதியில் தொடரும் கனிம வளக் கொள்ளை !!!! கைகொடுக்கும் மாவட்ட நிர்வாகம் !!!!!!
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் என்ற பெயரில் சமீபத்தில் அரசாணை எண்.MS213 தொழில்துறை நாள் 03.09.2021 பிறப்பிக்கப்பட்டது அரசாணையின் படி அனைத்து விவசாய நிலங்களில் இருந்தும் விவசாய மேம்பாட்டிற்காக மண்ணை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவ்வாறு செய்வது கனிம அகழ்வு என்ற வகையில் சேராது என்றும் மனித சக்தியை கொண்டே மண் அப்புறப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கல்குவாரி மண்குவாரி மண் மணல் போன்ற குவாரிகள் உள் அடக்கம். மேலும் 1959 ஆம் ஆண்டு வருட தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் 03.09.2021 முதல் மேற்கண்ட அரசாணைப்படி விதி எண் 44 புகுத்தப்பட்டுள்ளது. விதியின் படி எவ்வகையான விவசாய நிலங்களில் இருந்தும் மண் எடுத்துக் கொள்ளலாம் அவ்வாறு மண் எடுப்பது கனிம குவாரி செய்தல் என்றும் வகைப்படுத்தப்பட மாட்டாது. அதனால் சுரங்க திட்டம், சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவை தேவையில்லை, இருப்பினும் மண் எடுப்பது தொடர்பாக சில நிபந்தனைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளன அவை யாவும் மண் எடுக்க மனித சக்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,ஒன்றரை மீட்டர் ஆழத்திற்கு மட்டும் மண் எடுக்க வேண்டும் அப்படி மண் எடுக்கப்பட்டுள்ள விவசாய நிலம் விவசாயம் மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற சான்றிதழை இணைய இயக்குனர் வேளாண்மை துறையினரிடம் இருந்து பெற்ற விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தில் பட்டாதாரர் மட்டுமே அரசுக்கு விண்ணப்பிக்க இயலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடுக்கப்படும் மண்ணை செங்கல் சூளைகள் மற்றும் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்காக உரிமை கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இயந்திரம் பயன்பாட்டுக்களான கனரக வாகனங்களான ஜேசிபி, பொக்லைன் போன்றவற்றை பயன்படுத்தி லாரிகளில் விவசாயத்திற்கு உகந்த மண்ணை தோண்டி எடுத்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாழைகுளம் கன்மாயில் வண்டல் மண் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த புதிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாமியப்பா நாடார் மகன் சந்திரசேகரன் பட்டா எண் 2226, சர்வே எண் 143/ 12, 143/10, 143/7பி என்ற சர்வே எண்களில் வண்டல் மண்ணை எடுப்பதற்கு அனுமதி பெற்று விட்டு அரசு அனுமதி அளித்த அளவைவிட கடந்த 15.6.2026 - 16.6.2026, 23 6 2026 ஆகிய தேதிகளில் மேற்படி நபர் நாள் ஒன்றுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட யூனிட் மண் மணல் போன்ற கனிம வளங்களை ஜேசிபி வாகனம் குட்டி என்ற ராஜேந்திரன் என்பவர் மூலம் கொள்ளையடித்து மம்சாபுரம் காந்தி நகர் மதுபான கடை அருகில் சாமியப்பன் மகன் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் கொள்ளையடித்த கனிம வளங்களை குவித்து வைத்துள்ளார் கனிம வள கொள்ளையை தடுக்கக்கூடிய பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் மேற்படி சட்ட விரோத மணல் கொள்ளையர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் நபர் மூலமாக வண்டல் மண் எடுப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் அவருக்கு உடனே பாஸ் வழங்குவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது,
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு எங்கள் ஆட்சியில் லஞ்சம் லாவண்யம் ஒழிக்கப்படும் என தெரிவித்து வரும் அரசு துரிதமாக செயல்பட்டு கனிம வளத்தை கொள்ளையடித்து பதுக்கி வைத்த கனிம வளத்தை கைப்பற்றி அதை அளவீடு செய்து மேற்படி கனிம வளத்தை பறிமுதல் செய்து அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் வண்டல் மண் தடையின்றி கிடைக்க வழிவகுக்க வேண்டும் என அப்பகுதி விவசாய பெருமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
செய்தி: விமல்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.