உள்ளூர் செய்திகள்

Theni district - Strong winds caused damage in yielding agriculture land

தேனியில் வீசிய சூறை காற்றால் அறுவடைக்கு காத்திருந்த வாழை மரங்கள் நாசம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அழகாபுரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 01.05.2026 அன்று பலத்த காற்று வீசியதால் பல ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிட்டு ஒரு சில நாட்களில் அறுவடைக்கு காத்திருந்த சுமார் 5000க்கும் மேல் வாழை மரங்கள் சாய்ந்ததது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைபழங்கள் சாய்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையும் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யும் விதமாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தி: இளையவள்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.