உள்ளூர் செய்திகள்

Ramnad district - Contempt of court order

இராமநாதபுரம் திருவாடானையில் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் பாதைக்காக 15 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திய முதியவர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்க்கு உட்பட்ட மீனவ கிராமமான தொண்டி படையாச்சி தெருவில் வசித்து வருபவர் முத்துமாரி. முதியவரான இவருக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், கழிவுநீர் செல்லும் பாதையை அடைத்துள்ளதாகவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் புகார் மனு கொடுத்துள்ளார். மனுவை விசாரணை செய்த மாண்புமிகு நீதி அரசர் அவர்கள் மீனவர் முத்துமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு முத்துமாரியின் புகாரில் நியாயம் உள்ளது என தீர்ப்பளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை அரசுத்துறை அதிகாரிகள் தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நீதிபதியின் தீர்ப்பை மதிக்காமல் தன்னை மன உழைசலுக்கு ஆளாக்கி வருவதாகவும் கண்ணீர் மல்க கூறுகிறார். ஒரு சின்ன விசயத்திற்க்காக 15 ஆண்டுகளாக போராடிவரும் தனக்கு நீதி வேண்டும் என்றும் இது ஜனநாயக நாடு தானே இங்கு நடப்பது மக்களாட்சியா ? மன்னராட்சியா ? என கேள்வி எழுப்பியுள்ளார். 15 ஆண்டுகளாக போராடும் முதியவருக்கு உரிய நீதி கிடைக்கவும், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

செய்தி : தங்கம்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.