உலகம்

இந்தியாவில் சிக்கிய MV Europe என்ற கொகைன் கடத்தல்கப்பல்

உலகம் முழுவதும் கொகைன் சப்ளை செய்துவிட்டு இந்தியா வந்து சிக்கிய கடத்தல் கப்பல் !!!

       குஜராத் மாநிலம் முந்த்ரா துரைமுகத்திற்கு அருகில் முன்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த MV Europe என்ற கப்பலை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர். இதில் 26-ம் தேதி அதிகாலையில் குஜராத் தீவிரவாத தடுப்பு படையும், கடலோர பாதுகாப்பு படையும் கடலோர பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தினர்.

           இதனை கவனித்த கப்பலில் இருந்தவர்கள் அக்கப்பலில் இருந்து சாக்குமூட்டைகளை கடலுக்குள் தூக்கிப்போட்டனர். அந்த சாக்கு மூட்டைகளில் 5 மூட்டைகளை மட்டும் கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்ய முடிந்தது.           

           அந்த மூட்டைகளில் 115 கிலோ கொகைன் போதைப்பொருள் பாக்கெட்கள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1,150 கோடி என கூறப்படுகிறது. அந்தக் கப்பலில் இருந்தவர்களை கைது செய்து கப்பலை பறிமுதல் செய்தனர்.

        அந்தக் கப்பல் கடந்த 196 நாட்களாக தொடர்ந்து கடலில் பயணம் செய்து7 நாடுகள், 23 துறைமுகங்கள் சென்றுள்ளது.

           கப்பல் போக்குவரத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், அக்கப்பலின் முதல் நிறுத்தம் நவம்பர் 11, 2025 அன்று பிரேசிலின் சாவ் விசென்டேவில் அமைந்திருந்ததாக கூறுகிறது. அதைத் தொடர்ந்த அடுத்து வந்த மாதங்களில், பனாமா கால்வாயில் நுழைவதற்கு முன்பு, அக்கப்பல் பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலுள்ள துறைமுகங்கள் வழியாகப் பயணித்தது. பின்னர், அக்கப்பல் பஹாமஸ், டொமினிக்கன் குடியரசு மற்றும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பல்வேறு துறைமுகங்களுக்குப் பயணம் மேற்கொண்டது.

           குறிப்பாக பிரேசில், பனாமா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட துறைமுகங்களுக்கு இக்கப்பல் மீண்டும் மீண்டும் சென்று வந்தது. இதன் விளைவாக, இப்பயணத்தின் போது 40 முறை துறைமுகங்கள் மற்றும் இடங்களில் நின்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியில், இக்கப்பல் தெற்காசியாவை நோக்கிப் பயணித்து, மே 19 அன்று நவி மும்பைக்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை அடைந்தது.

            பின்னர் மே 22 அன்று பாகிஸ்தானின் காசிம் துறைமுகத்திற்குச் சென்று, இறுதியாக மே 26 அன்று முந்த்ராவைச் சென்றடைந்தது. கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய மற்றொரு கப்பலுக்காக அந்தக் கப்பல் முந்த்ராவில் நங்கூரமிட்டு இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படையினரிடம் சிக்கிக்கொண்டது

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.