உள்ளூர் செய்திகள்

Dindigul district - Grievance against forest department

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் மரம் கடத்திய நால்வர் மற்றும் 11 லாரிகள் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தும் கைது நடவடிக்கை இல்லை என புகார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன மாவட்டத்தில் உள்ள மேல்மலை மன்னவனூர் வளச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி பச்சை மரங்களை வெட்டி கடத்திய நான்கு நபர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மரங்களை வெட்டி கடத்துவதற்கு பயன்படுத்திய பத்துக்கும் மேற்பட்ட லாரி மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட வன தலைவரின் உத்தரவின் பெயரில் மன்னவனூர் வனச்சரகர் கடிதம் அனுப்பியும் தற்போது வரை 11 லாரி மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்யாமல் வனத்துறை காலதாமதம் செய்து வருவதாகவும் லாரிகளை ஜப்தி செய்யாமல் இருப்பதாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்

      தற்போது வரை பதினோரு லாரிகளும் கொடைக்கானல் மலையில் இருந்து பெருமாள் மலை சோதனை சாவடி வத்தலகுண்டு சோதனை சாவடி பழனி சோதனை சாவடி வழியாக தொடர்ந்து சென்று வருவதாகவும் வனத்துறை சார்பாக அதிநவீன சிசிடிவி கேமராக்கள் சோதனை சாவடிகளில் அமைக்கப்பட்டும் வாகனங்களை காணவில்லை என அதிகாரிகள் கூறுவதாக கூறப்படுகிறது.

       நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட கொடைக்கானல் பகுதியில் சேர்ந்த மர கொள்ளையர்கள் நான்கு பேரும் தற்போது வரை வனத்துறையால் கைது செய்யவில்லை அவர்கள் தப்பி ஓடி விட்டதாக கூறுவதாகவும் கூறப்படுகிறது. கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் திண்டுக்கல்லுக்கு நான்கு நபர்களும் சென்று வருவதாகவும் தொடர்ந்து மரக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் 4வர் அணியின் கூட்டாளிகள் கூறுகின்றனர்

           இந்த மரக் கடத்தலுக்கு குறிப்பிட்ட வன அலுவலர்களும் வருவாய் அலுவலர்களும் தான் உடந்தையாக உள்ளனர் என சக வன அலுவலர்களும் வருவாய் துறை ஊழியர்களும் கூறுகின்றனர்.

       எனவே மாவட்ட நிர்வாகம் மரக்கடத்தில் ஈடுபவர்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் கொடைக்கானல் மேல்மலை பாதுகாக்கப்படும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.