தமிழக அரசு - மத்திய அரசு இடையே காணொலிக் காட்சி வாயிலாக ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் ஒப்பந்தம் !
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தும், மத்திய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் புதுதில்லியிலிருந்தும் கலந்து கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில், ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (2.6.2026) கையெழுத்திடப்பட்டது.
இது தொடர்பாக அரசின் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்க்குறிப்பில், 'ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் முதற்கட்டமாக 2019ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசினுடைய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் மிஷன் மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள 46.71 இலட்சம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் 21,258 ஒற்றைக் கிராமத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.18,123.05 கோடி ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.9.025.68 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.9,097.37 கோடி ஆகும்.
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டதன் மூலம், மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப்பெறும் என்று வெளியாகியுள்ளது.
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.