மாநில செய்திகள்

தமிழ்நாடு - பள்ளி மாணவர்கள் இனி பள்ளிக்கு பைக் ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்..!

தமிழக பள்ளிக் கல்வித் துறை, மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது

              தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

         இதன்படி, பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் சாலை பாதுகாப்பு மன்றம் அமைக்கப்பட வேண்டும். காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தினமும் சாலை பாதுகாப்பு குறித்துப் பேச வேண்டும். மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்தால், அதைப் பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். 

          போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பள்ளிகளில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

         மேலும், மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கிய பிறகே ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.